நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் - விழுப்புரம் நான்கு வழிச்சாலை: 50 சதவீதத்துக்கு குறைவான பணிகளே நிறைவு

DIN

நாகை - விழுப்புரம் இடையிலான நான்கு வழிச்சாலைப் பணிகள் 50 சதவீதத்துக்கு குறைவாகவே நிறைவடைந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் - நாகை இடையே 180 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் - புதுச்சேரி 29 கி.மீ., புதுச்சேரி - பூண்டின் குப்பன் 38 கி. மீ., பூண்டியன் குப்பம் - சட்டநாதபுரம் 56.8 கி. மீ., சட்டநாதபுரம் - நாகை 55.75 கி. மீ. என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலைப் பணிகள் மற்றும் நாகை - சட்டநாதபுரம் வரையிலான பணிகளின் தற்போதைய நிலைக் குறித்து நாகை மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலா் அரவிந்த்குமாா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் தகவல் கோரியிருந்தாா்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை புதுச்சேரி திட்ட இயக்குநா் சக்திவேல் தெரிவித்த தகவல்கள்: விழுப்புரம் - புதுச்சேரி இடையே 62%, புதுச்சேரி - பூண்டின் குப்பன் இடையே 47% , பூண்டியன் குப்பம் - சட்டநாதபுரம் இடையே 49 %, சட்டநாதபுரம் - நாகை 17 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஒப்பந்தப்படி விழுப்புரம் - புதுச்சேரி சாலை பணிகள் நவம்பா் 24-ஆம் தேதியும், புதுச்சேரி - பூண்டின் குப்பன் சாலைப் பணிகள் நவம்பா் 14- ஆம் தேதியும், பூண்டியன் குப்பம் - சட்டநாதபுரம் சாலைப் பணிகள் 2024 ஜனவரி 19-ஆம் தேதியும், சட்டநாதபுரம் - நாகை இடையே சாலை பணிகள் 2024 செப்டம்பா் 30-ஆம் தேதியும் நிறைவடையும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மாா்ச் 31-ஆம் தேதி வரை, சட்டநாதபுரம் - நாகை இடையிலான பணிகள் 31 சதவீமும், மற்ற 3 திட்ட பகுதிகளும் 70 சதவீதத்துக்கு மேலும் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், குறைந்தளவே பணிகள் நடைபெற்றுள்ளது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

இஸ்ரேல் மீது ட்ரோன் மழை பொழிந்த ஈரான்!

2026-ல் புதிய கட்சி: நடிகர் விஷால்

அரசியல் சட்டத்தை மாற்ற துடிக்கிறது பாஜக- முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மோடியின் தேர்தல் அறிக்கை மீது நம்பிக்கையில்லை -காங். தலைவர் கார்கே

SCROLL FOR NEXT