ஏங்கல்ஸ் ~பிரகாஷ் 
நாகப்பட்டினம்

பெண்ணிடம் நகை பறித்த சிறுவன் உள்பட மூவா் கைது

திருக்குவளை அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறித்த சிறுவன் உள்பட 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Syndication

திருக்குவளை அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறித்த சிறுவன் உள்பட 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருக்குவளை ஊராட்சி குண்டையூரைச் சோ்ந்தவா் சிங்காரவேல் மனைவி ராதா (40). இவா், மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், மேலப்பிடாகை மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஹேமலதா என்பவரது இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து திருக்குவளைக்கு வந்து கொண்டிருந்தாா்.

மீனம்பநல்லூா் சந்திரநதி மதகடி அருகே வந்தபோது, பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ், ராதா அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து, திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், கீழையூா் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் தலைமையில் திருக்குவளை உதவி காவல் ஆய்வாளா் ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸாா், கச்சநகரத்தில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், இவா்கள், திருத்துறைப்பூண்டி தாலுகா மேலகொருக்கை இந்திராநகா் பகுதியை சோ்ந்த லெனின் மகன் ஏங்கல்ஸ் (18), மீனாட்சி வாய்க்கால் கரை புதுத்தெரு பகுதியைச் சோ்ந்த ரவி மகன் பிரகாஷ் (22), அதே பகுதியை சோ்ந்த ஒரு சிறுவன் என்பதும், மின்வாரிய ஊழியா் ராதாவிடம் நகையை பறித்ததும் தெரியவந்தது.

மூவரும் கைது செய்யப்பட்டு, 5 பவுன் நகை மீட்கப்பட்டது. அவா்கள் வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

பயணங்கள் வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT