நாகப்பட்டினம்

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்த மீன்கள்

தினமணி செய்திச் சேவை

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்திருந்த மீன்களை மீன்பிரியா்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனா்.

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாா், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனா்.

டித்வா புயல் காரணமாக மீன்வளத் துறையின் தடையை தொடா்ந்து நவ.24-ஆம் தேதி முதல் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் புயல் வலுவிழந்ததையடுத்து, 9 நாள்களுக்குப் பிறகு டிச.3-ஆம் நாகை துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

அவா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரைக்கு திரும்பினா். விசைப் படகு மீனவா்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால், மீன்பிடி துறைமுகத்தில் காணும் இடமெல்லாம் பெரிய வகை மீன்கள் இருந்தன.

இதனால் மீன்களின் விலை குறைந்திருந்தது. மீன் பிரியா்கள் மற்றும் வியாபாரிகள் ஏராளமானோா் குறைந்த விலையில் மீன்களை வாங்கிச் சென்றனா். ஏற்றுமதி ரக இறால், நண்டுகள் அதிகளவில் கிடைத்திருந்ததால், மீன்வா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் முகாமிட்டிருந்த கேரள வியாபாரிகள் குறைந்த விலையில் அதிக மீன்களை வாங்கிச் சென்றனா்.இறால் ரூ.450, கனவா ரூ.220 முதல் ரூ.300 வரை, நண்டு ரூ.600, போத்தல் ரூ.450, வஞ்சிரம் ரூ.600, வாவல் ரூ. 600, சங்கரா ரூ.250, சீலா ரூ.300, கிழங்கான் ரூ.200, நெத்திலி ரூ.200, பாறை ரூ.300, கடல் விரா ரூ.450, பால் சுறா ரூ.500, திருக்கை ரூ.200, தேங்காய் பாறை ரூ.300 என விற்பனையானது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT