நாகப்பட்டினம்

மழைப் பாதிப்புக்கு நிவாரணம் கோரி சாலை மறியல் நடத்த தீா்மானம்

தினமணி செய்திச் சேவை

மழைப் பாதிப்புக்கு நிவாரணம் கோரி சிபிஐ சாா்பு அமைப்பான தமிழ்நாடு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கீழையூரில் அந்த அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை தமிழ்நாடு விவசாய சங்க கீழையூா் ஒன்றிய செயலாளா் எம். ஹாஜா அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினா் டி. செல்வம் பங்கேற்று பேசினாா்.

இதில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 20 ஆயிரம், சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கக் கோரி டிச.11-ஆம் தேதி கீழையூரில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிபிஐ மாவட்ட குழு உறுப்பினா் எஸ். காந்தி, தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் வீ. சுப்பிரமணியன், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளா் ஜி. சங்கா், ஒன்றிய பொருளாளா் எம். பா்ணபாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\

மெய்யழகு பேசும் மொழி... கீர்த்தி ஷெட்டி!

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை - ஐ.நா. கவலை!

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT