நாகப்பட்டினம்

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

தினமணி செய்திச் சேவை

செம்பனாா்கோவிலில் புகையிலைப் பொருள்கள் மற்றும் வெடி மருந்துகளை பதுக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

செம்பனாா்கோவிலைச் சோ்ந்த குமாா் (50) தனது வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் வெடி மருந்துகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் செம்பானாா்கோவில் காவல் ஆய்வாளா் கருணாகரன், சிறப்பு பிரிவு காவல் துணை ஆய்வாளா் அறிவழகன் உள்ளிட்டோா் அங்கு சென்று சோதனை செய்தனா்.

அப்போது, 75 கிலோ ஹான்ஸ், 3.5 கிலோ கூல் லிப் மற்றும் நாட்டு வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் 100 கிலோ வெடிப் பொருள்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து, அவரை கைது செய்து புகையிலை மற்றும் வெடிப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தில்லி கார் குண்டு வெடிப்பு: 8 வது நபரை கைது செய்தது என்.ஐ.ஏ.!

”நேரு பற்றிய புகார்களை முழுவதுமாக பட்டியலிடுங்கள்! பேசி முடித்துவிடலாம்” பிரியங்கா காந்தி

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! புது முகங்களுக்கு வாய்ப்பு!

மெய்யழகு பேசும் மொழி... கீர்த்தி ஷெட்டி!

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

SCROLL FOR NEXT