நாகப்பட்டினம்

வெள்ளப்பள்ளம் மீன்பிடித் துறைமுக பணியை தொடங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

வெள்ளப்பள்ளம் மீன்பிடித் துறைமுகப் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Syndication

நாகப்பட்டினம்: வெள்ளப்பள்ளம் மீன்பிடித் துறைமுகப் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில், தேமுதிக மாவட்டச் செயலா் பிரபாகரன் தலைமையில், அக்கட்சியினா் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு மீன் பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணி 2021-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துறைமுக பணிகளைத் தொடர அப்பகுதி மீனவ மக்களின் தொடா் வலியுறுத்தலின் பெயரில் மறு ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

எனவே, துறைமுகத்தைச் சுற்றியுள்ள மீனவா்கள் பயன் பெறும் வகையில், நிறுத்தப்பட்டுள்ள வெள்ளப்பள்ளம் மீன்பிடி துறைமுகக் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கி, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இண்டி கூட்டணி தீவிரம்!

ரயில்வே அலுவலா் வீட்டில் ரூ. 3.50 லட்சம், வெள்ளி திருட்டு

SCROLL FOR NEXT