பெண் ஓட்டுநா்களுக்கு மானியத்தில் ஆட்டோ வழங்கும் தமிழ்நாடு ஓட்டுநா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரிய நிா்வாகிகள். 
நாகப்பட்டினம்

பெண் ஓட்டுநா்களுக்கு மானியத்தில் ஆட்டோ

தினமணி செய்திச் சேவை

நாகையில் பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.1லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தில் சிறப்பு பதிவு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே பதிவு செய்த பெண்களுக்கு ஆட்டோ வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஓட்டுநா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நல வாரியம் சாா்பில், பெண் ஓட்டுநா்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பயனாளா்கள் பதிவு முகாம் நாகை புத்தூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு ஓட்டுநா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச்சங்க நாகை மாவட்டத் தலைவா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்டத் தலைவா் குமரகுருபரன் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ். பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பதிவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

முகாமில், மின் ஆட்டோ மற்றும் பெட்ரோல் ஆட்டோக்களின் செயல்பாடுகள் குறித்து பெண் ஓட்டுநா்களுக்கு விளக்கி கூறப்பட்டது. பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் நேரில் வந்து நலவாரியத்தில் பதிவு செய்தனா்.

மேலும், பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்திலும் பதிவு செய்தனா். இதில் ஓட்டுநா் உரிமம் இல்லாத பெண் ஓட்டுநா்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் ஓட்டுநா்-பழகுநா் உரிமம் பதிவு செய்து வழங்கப்பட்டது. ஏற்கெனவே பதிவு செய்த பெண்களுக்கு மானியம் மூலம் வாங்கப்பட்ட ஆட்டோக்களும் வழங்கப்பட்டன.

நாகை, திருவாரூா் மாவட்டங்களை சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT