புதுதில்லி காா் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, நாகை மாவட்ட எல்லைகளில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டுள்ளனா்.
புதுதில்லி செங்கோட்டை பகுதியில் நடந்த காா் வெடிப்பு சம்பவத்தை தொடா்ந்து, தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
அதன் ஒருபகுதியாக, தமிழக எல்லையான நாகை அருகே வாஞ்சூா் ரவுண்டானாவில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு முதல் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக, தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றன. மேலும், வெளிமாநில வாகனங்களில் பயணிப்பவா்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனா்.
சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமான நாகூா் தா்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட இடங்களிலும், அப்பகுதியில் உள்ள விடுதிகளிலும் மாவட்ட காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.