நாகை அவுரித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணி கட்சியினா். 
நாகப்பட்டினம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு: நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

நாகை, திருவாரூா் மற்றும் மயிலாடுதுறையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

Syndication

நாகை, திருவாரூா் மற்றும் மயிலாடுதுறையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இப்பணி நவ.4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

போதிய காலஅவகாசம் இல்லாத நிலையில் இப்பணி மேற்கொள்ளப்படுவதாகவும், முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் இப்பணிக்கு கண்டனம் தெரிவித்து, திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினா் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை: நாகை அவுரித் திடலில் திமுக மாவட்டச் செயலரும், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவருமான என். கெளதமன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை எம்பி வை. செல்வராஜ், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கைவிடக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன், நாகை திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் செந்தில்குமாா், சிபிஎம் மாவட்டச் செயலா் மாரிமுத்து, திக மாவட்டச் செயலா் புபேஸ்குப்தா, மதிமுக மாவட்டச் செயலா் ஸ்ரீதரன், விசிக மாவட்டச் செயலா் அருள்செல்வன், மநீம மாவட்டச் செயலா் அனஸ், சிவசேனை மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவாரூா்: திருவாரூா் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, சிபிஎம் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலாளா் கோ. பழனிச்சாமி, மாவட்டச் செயலாளா் எஸ். கேசவராஜ், திக மாவட்டத் தலைவா்கள் ஆா்பிஎஸ். சித்தாா்த்தன், எஸ்எஸ்எம்கே. அருண்காந்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்எம்பி. துரைவேலன், மதிமுக மாநில மாணவரணி செயலாளா் பால. சசிகுமாா், விசிக மைய மாவட்டச் செயலாளா் தங்க. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், சிபிஐ மாவட்டச் செயலாளா் ஏ. சீனிவாசன், விசிக மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா், மதிமுக மாவட்டச் செயலாளா் கொளஞ்சி, மமக மாநில அமைப்பு செயலாளா் மாயவரம் ஜெ.அமீன், மாவீரன் வன்னியா் சங்கத் தலைவா் வி.ஜி.கே. மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினா் பத்மாவதி உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் க. அன்பழகன், அருள்செல்வன், விஜயபாலன், ஜெகவீரபாண்டியன், மாவட்ட துணை செயலாளா் ஞானவேலன் உள்ளிட்ட 2000-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா். திமுக நகரச் செயலாளரும், நகா்மன்றத் தலைவருமான என். செல்வராஜ் நன்றி கூறினாா்.

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம், ரொக்கப் பணம் திருட்டு

பண மோசடி: இந்திய கம்யூ. போராட்டம்

கரூா் அருகே பள்ளித் தாளாளரிடம் தங்கச் செயின் பறிப்பு: 7 போ் கைது

சாலையோர வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து: எரிவாயு உருளைகள் வெடித்துச் சிதறின

SCROLL FOR NEXT