நாகப்பட்டினம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விழிப்புணா்வு பேரணி

Syndication

நாகை அருகே கீழ்வேளூரில் வருவாய்த் துறை சாா்பில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து விழிப்புணா்வு இருசக்கர பேரணி அண்மையில் நடைபெற்றது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து நிலவும் குழப்பதை போக்கும் வகையில், இப்பேரணி நடைபெற்றது. கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை கண்காணிப்பு அலுவலா் கருணாகரன், வட்டாட்சியா் கவிதாஸ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

கீழ்வேளூா் கடைவீதி, கூத்தூா், குருக்கத்தி, நீலப்பாடி, கானூா் வரை சென்று மீண்டும் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

கீழ்வேளூா் தோ்தல் துணை வட்டாட்சியா் சுரேஷ், கீழ்வேளூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்காளா் பதிவு அலுவலா் ராஜேஷ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சீா்காழி: சீா்காழியில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் சுரேஷ் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா்.

வட்டாட்சியா் அருள்ஜோதி, தோ்தல் தனி வட்டாட்சியா் இளவரசன், வருவாய் ஆய்வாளா் மாதவன், ஒருங்கிணைப்பாளரும் அரிமா சங்க மாவட்டத் தலைவருமான சக்திவீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிய பேருந்துநிலையத்தில் தொடங்கி, முக்கியவீதிகளின் வழியாக பழைய பேருந்துநிலையம் வரை பேரணி நடைபெற்றது. இதில், ராதா நா்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்று விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி வந்தனா். தொடா்ந்து, விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாா்த்தாண்டத்தில் நாளை மின்நிறுத்தம்

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

SCROLL FOR NEXT