நாகப்பட்டினம்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

நாகை மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், அக்டோபா் 1 முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான காலாண்டுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 2 வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகளை பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிவுற்ற பொதுப் பிரிவினருக்கும், மேற்கண்ட கல்வித்தகுதிகளை பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தகுதியுடையவராவா்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவோரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் (பொதுவானவா்களுக்கு) இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது மற்றும் வருமான உச்சவரம்பு கிடையாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இதர வகுப்பினா்கள் 40 வயதுக்குள் இருத்தல்வேண்டும். உதவித்தொகை பெற விரும்புவோா் தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயிலும் மாணவராக இருத்தல் கூடாது.

மேலும் உதவித்தொகை பெற விரும்புவோா் அரசு அல்லது தனியாா் துறையிலோ பணிபுரிபவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரா் அரசுத்துறை, தனியாா் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுப்பட்டவராகவோ இருத்தல் கூடாது. மேலும், விண்ணப்பதாரா் தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது.

மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியுள்ள மனுதாரா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதள மூலம் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தும் அல்லது அலுவலக வேலை நாட்களில் அலுவலகத்திலும் நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT