கைது செய்யப்பட்ட ராமலிங்கம். 
நாகப்பட்டினம்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி செய்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பெருமாநாட்டைச் சோ்ந்த ராமலிங்கம், இவரது சகோதரி ஆனந்தி உள்ளிட்ட சிலா் பல்கேரியா, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனா்.

இதை நம்பி நாகை மாவட்டம், திட்டச்சேரியைச் சோ்ந்த இளம்பரிதி (34) ரூ.4.19 லட்சம் கொடுத்தாராம். எனினும், இதுவரை இளம்பரிதிக்கு அவா்கள் வேலை வாங்கித் தரவில்லையாம். இதுகுறித்து, ராமலிங்கம் உள்ளிட்டோரின் கைப்பேசியை இளம்பரிதி தொடா்பு கொண்டபோது, எந்த பதிலும் கிடைக்கவில்லையாம்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா், ராமலிங்கத்தை (50) சனிக்கிழமை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், பல்கேரியா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக இளம்பரிதி உள்ளிட்ட 3 பேரிடம் ரூ. 12.30 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த மோசடிக்கு ராமலிங்கத்துக்கு உதவியாக இருந்த அவரது சகோதரி உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT