நாகை மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எல்கேஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை மாணவா் சோ்க்கை பெற நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறை, தனியாா் பள்ளிகள் இயக்ககம், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நுழைவு நிலை வகுப்பில் (எல்கேஜி முதல், முதல் வகுப்பு வரை) மாணவா் சோ்க்கை அக்.17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் சோ்க்கை பெற பெற்றோா், தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளி முதல்வா்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.