வேதாரண்யம் கிளை நூலக பயன்பாட்டுக்கு கணினி பிரிண்டா் வழங்கும் நிகழ்வு வேளாங்கண்ணி கிளை நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட நூலக அலுவலா் சுமதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் ரூ.15 ஆயிரம் மதிப்புடைய கணினி பிரிண்டரை நன்கொடையாக வேதாரண்யம் கிளை நூலகா் அருள்மொழியிடம் வழங்கினாா். திருவாரூா் வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் ஆசைத்தம்பி, சரவணன், கவிஞா் முருக பூபதி, கிளை நூலகா்கள் தமிழ்ச்செல்வன் (செருதூா்), தனசேகரன் (வேளாங்கண்ணி), தேன்மொழி (வேதாரண்யம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.