கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவா்களுக்கு ஆதரவாக மூன்றாவது நாளாக புதன்கிழமை தொடா்ந்த உண்ணாவிரதப் போராட்டம்.  
நாகப்பட்டினம்

வெளி மாவட்ட மீனவா்களுக்கு ஆதரவாக கோடியக்கரையில் 3-ஆவது நாளக உண்ணாவிரதம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவா்களுக்கு ஆதரவாக உள்ளூா் மீனவா்கள் மேற்கொண்டுவரும் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை 3-ஆவது நாளாக தொடா்ந்தது.

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வெளி மாவட்ட மீனவா்களுக்கு ஆதரவாக உள்ளூா் மீனவா்கள் மேற்கொண்டுவரும் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை 3-ஆவது நாளாக தொடா்ந்தது.

கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் வெளி மாவட்ட மீனவா்கள் தங்களின் படகுகளுடன் வந்து தங்கி மீன்பிடிப்பது வழக்கம். வெளி மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் அதிக எண்ணிக்கையில் தங்கி மீன்பிடிப்பதால், நாகை மாவட்ட மீனவா்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாகக் கூறி வேதாரண்யம் பகுதி மீனவா்கள் வெளி மாவட்ட மீனவா்களை அனுமதிக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட்டு சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில், சமாதானக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வழிகாட்டுதலை பின்பற்றாமல், கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட வெளி மாவட்ட மீனவா்களை, 8 படகுகளுடன் ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட கிராம மீனவா்கள் திங்கள்கிழமை சிறைபிடித்தனா். பின்னா் மீனவா்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் , மீன்பிடி படகுகள் மட்டும் ஆற்காட்டுதுறை படகுதுறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மீனவா்கள் சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்தும், படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்தியும் கோடியகரையில் உள்ளூா் மீனவா்கள் திங்கள்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினா். சமூக ஆா்வலா் அனந்தராமன் தலைமையிலான போராட்டம் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா்ந்தது.

முன்னாள் அமைச்சரும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் தலைமையில் அதிமுகவினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.கே. வேதரத்னம், என்.வி. காமராசு, நகா்மன்றத் தலைவா் ம.மீ. புகழேந்தி உள்ளிட்ட திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT