நாகையில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள். 
நாகப்பட்டினம்

நாகை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

Syndication

நாகை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிகழும் முறைகேடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 600, ஓட்டுநா்களுக்கு ரூ.740 தினக்கூலியாக வழங்க வேண்டும். தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்த மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி தொகையை உரிய கணக்கில் செலுத்தவேண்டும், 2024-25-ஆம் ஆண்டுக்கான போனஸ் 8.33 சதவீதம் வழங்கவேண்டும்.

மாதந்தோறும் வழங்கும் ஊதியத்துக்கு ரசீது வழங்க வேண்டும், நகராட்சியில் ஒப்பந்த முறையை ரத்து செய்து அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

போராட்டத்தில், சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ்.ஆா். ராஜேந்திரன், மாவட்டச்செயலா் சிவனருட்செல்வன், சிபிஎம் நாகை நகரச்செயலா் வெங்கடேசன், உள்ளாட்சி ஊழியா் சங்க மாநிலச் செயலா் கே. தங்கமணி, தூய்மைப் பணியாளா்கள் சங்கத் தலைவா் சுதா, செயலா் தனலட்சுமி, பொருளாளா் செல்வி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT