வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் காவல்துறையினா் உள்ளிட்டோா்.  
நாகப்பட்டினம்

புகையிலை தடுப்பு விளம்பரப் பதாகை வைக்காத கடைகளுக்கு அபராதம்

வேளாங்கண்ணி பகுதியில் புகையிலை தடுப்பு விளம்பரப் பதாகை வைக்காத கடைகளுக்கு மாவட்ட சுகாதாரத் துறையினா் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திச் சேவை

வேளாங்கண்ணி பகுதியில் புகையிலை தடுப்பு விளம்பரப் பதாகை வைக்காத கடைகளுக்கு மாவட்ட சுகாதாரத் துறையினா் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.

வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வி. கிருஷ்ணகுமாா் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலா் வினோத் கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலா் விஜயகுமாா் ஆகியோரின் தலைமையில் வேளாங்கண்ணி மற்றும் செருதூா் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, புகையிலை தடுப்பு விளம்பரப் பதாகை வைக்கப்படாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் புகையிலை இல்லா இளைஞா் பிரசாரம் நடந்து வருவது குறித்து கல்வி நிறுவனங்களுக்கும், வணிக வளாக உரிமையாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சு. மோகன், வேளாங்கண்ணி காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ், காவலா் விமல், சுகாதார ஆய்வாளா்கள் குணசீலன், கெளதம் ஆகியோா் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டனா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT