திருவாரூர்

திருமண விருந்தில் மோதல்: 5 பேர் கைது

கொரடாச்சேரி அருகே புதன்கிழமை நடைபெற்ற திருமண விருந்தில் மோதலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

DIN

கொரடாச்சேரி அருகே புதன்கிழமை நடைபெற்ற திருமண விருந்தில் மோதலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொரடாச்சேரி அருகேயுள்ள வெள்ளக்குடியில் செந்தில் என்பவரது வீட்டில் திருமண விருந்து நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதே பகுதியைச் சேர்ந்த சண்முகத்துக்கும் (44) சங்கருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை சண்முகத்தின் மகன் சதீஷ்குமார் தட்டிக் கேட்டார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் காயமடைந்த சதீஷ்குமார், சங்கர் தரப்பைச் சேர்ந்த சாமிக்கண்ணு (44), வெங்கடேஷ் (24) ஆகிய 3 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து, இருதரப்பையும் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT