திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர் வட்டம் கல்யாணசுந்தரபுரத்தில் கோட்டாட்சியர், நன்னிலம் வட்டம் சொரக்குடியில் சரக துணைப் பதிவாளர், குடவாசல் வட்டம் மணப்பறவையில் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர், வலங்கைமான் வட்டம் சாலபோகத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆகியோர் தலைமையில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இதேபோல், நீடாமங்கலம் வட்டம் ரிஷியூரில் மாவட்ட வழங்கல் அலுவலர், மன்னார்குடி வட்டம் கருப்புக்கிளாரில் மன்னார்குடி கோட்டாட்சியர், திருத்துறைப்பூண்டி வட்டம் கீரக்களூரில் மன்னார்குடி சரக துணைப் பதிவாளர் ஆகியோர் தலைமையில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
மேற்கண்ட அனைத்துப் பகுதிகளிலும் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும்.
எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அங்காடிகளின் செயல்பாடுகள், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை, முகவரி மாற்றம் போன்றவை குறித்து தங்களது கோரிக்கையை மனுவாக அளித்து பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.