திருவாரூர்

ஆகஸ்ட் 3, 4-இல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வெள்ளி விழா மாநாடு

குடவாசலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 25-ஆவது வெள்ளி விழா மாநாடு வருகிற ஆகஸ்ட் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

DIN

குடவாசலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 25-ஆவது வெள்ளி விழா மாநாடு வருகிற ஆகஸ்ட் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய விவசாய சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் குடவாசல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விவசாய சங்க மாவட்டத் தலைவர் வி.எஸ். கலியபெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில், மேற்கண்ட மாநாட்டை சிறப்பாக நடத்த குழு அமைக்கப்பட்டது. அதன்படி, மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவர் மற்றும் செயலாளராக விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் தம்புசாமி, குடவாசல் ஒன்றியச் செயலாளர் சேகர் பொருளாளராகவும், ஒன்றியத் தலைவர் சம்பந்தம் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என 50 பேரைக் கொண்ட வரவேற்பு குழுவும் தேர்வு
செய்யப்பட்டது. கூட்டத்தில், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT