திருவாரூர்

ஆழித்தேர் ஓடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் ஓடும் நான்கு வீதிகளிலும் ஆக்கிமிரப்புகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.

DIN

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் ஓடும் நான்கு வீதிகளிலும் ஆக்கிமிரப்புகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆழித்தேர் விழாவையொட்டி, அனைத்துத் துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
மே 28-இல் விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம், மே 29-இல் ஆழித்தேர், அம்மன் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
விழாவையொட்டி காவல்துறையினர் தேருக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாக செய்ய வேண்டும். தேரோட்டத்துக்கு  முன்பு இரு நாள்கள், பின்பு இரு நாள்கள் நகருக்குள், வீதிகளுக்குள், கோயிலுக்குள், கமலாலயக் குளக்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
தேரோட்டத்துக்கு தகுந்தாற்போல்  நகருக்குள் போக்குவரத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆழித்தேர் ஓடும் நான்கு வீதிகளிலும் ஆக்கிமிரப்புகளை முற்றிலும் அகற்ற வேண்டும். தேரோட்டத்தின்போது தேர்  சக்கரங்களைச் சுற்றி பொதுமக்கள் வராமலிருக்க கயிறு வளையம் அமைக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் சுகாதாரமான குடிநீர், தேவையான இடங்களில் கழிவறைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். துப்புரவுப் பணியாளர்களை நியமித்து நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தீயணைப்புத் துறை தேருக்கு அருகில் தீயணைப்பு வாகனம் ஒன்றை நிறுத்தி வைக்க வேண்டும்.
வீதிகளில் தேர் பவனி வரும்போது தேருக்கு பின்னால் அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் தொடர்ந்து வர வேண்டும்.
மின்சாரத்துறை விழா நாளையொட்டி தடையின்றி நகர் மற்றும் கோயிலுக்கு வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் தேரோடும் நான்கு வீதிகளிலும் சாலையின் மையப் பகுதியை தெளிவுப்படுத்தும் வகையில் வெள்ளைக்கோடு மற்றும் வீல் மார்க்கிங் செய்து கொடுக்க
வேண்டும்.
தேரோட்ட நாளில் சாலையின் குறுக்கே செல்லும் தொலைபேசி  கம்பிகளை மாற்றிக் கொடுக்க வேண்டும்.
மாவட்ட மருத்துவமனையில் பகல் இரவு முழுவதும் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியாற்ற வேண்டும். தேரோட்ட நாளில் தாற்காலிக மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தேரோட்ட விழாவில் கலந்துகொண்டு எளிதாக திரும்பிச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார் நிர்மல்ராஜ்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அப்துல்லா, கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி, அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், செயல் அலுவலர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT