திருவாரூர்

புத்தறிவு பயிற்சி முகாம்

மன்னார்குடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், நகர் மற்றும் கிராமப்புற வளர் இளம் பெண்களுக்கு புத்தறிவு பயிற்சி

DIN

மன்னார்குடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், நகர் மற்றும் கிராமப்புற வளர் இளம் பெண்களுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் மூவாநல்லூர் சேவை மையத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றன.
முகாமுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செ. ஜெனிபர் பர்கிரேஸ் தலைமை வகித்தார். மன்னார்குடி பொது மருத்துவ அலுவலர் கார்த்திக், மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரூபாவதி, குழந்தைகள் ஊட்டச்சத்து நிபுணர் அபிதேவி, சைல்டுலைன் உறுப்பினர்கள் சி.பிரகலாதன், நாம்சோ ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இதில் வளர் இளம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய  சட்டங்கள், உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு, பெண் கல்வி ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT