திருவாரூர்

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரிக்கை

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DIN

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 3  ஆண்டுகளுக்கும் மேலாக பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் 80 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளின் பெற்றோரில் பெரும்பாலானோர்  ஏழ்மை நிலையில் உள்ளனர். இதனால், தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் மேல் நிலைக் கல்வியில் சேர்க்க முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில், நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் புதிய கட்டடம் திறக்கப்படவுள்ளதால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இப்பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வசதியாக இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி,நிகழ் கல்வியாண்டிலேயே 11-ஆம் வகுப்பு தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT