திருவாரூர்

அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்

அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் கேட்டுக் கொண்டார்.

DIN

அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து திருவாரூரில் வியாழக்கிழமை நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:
அதிமுக தலைமையிலான தமிழக அரசு அனைத்து அதிகாரங்களையும் இழந்து செயல்பட முடியாத அரசாக உள்ளது. முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக சட்டப்பேரவை  உறுப்பினர்கள் கூட்டத்தில் 109 பேர் வந்திருந்தாக தெரிவிக்கப்பட்டது. மைனாரிட்டி அரசு ஆட்சி நடத்துவது சரியல்ல.
அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றால் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி தனது பெரும்பான்மை பலத்தை முதல்வர் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில்,  தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.  முதல்வர் சட்டப் பேரவையைக் கூட்ட  தவறும்பட்சத்தில், அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும்.
நீட் தேர்வில் மத்திய, மாநில அரசுகளின் தவறான நடவடிக்கையால் மாணவி அனிதா உயிரிழந்துள்ளார்.  அனிதாவின் மரணத்துக்கு பிரதமரும், முதல்வரும் பொறுப்பேற்க வேண்டும்.  நீட் தேர்வுக்காக மாணவர்களின் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. தீர்வு கிடைக்கும் வரை தவிர்க்க முடியாத போராட்டமாக இது இருக்கும்.
நிகழாண்டும் குறுவை பொய்த்துள்ளதால், ஒரு போக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத் தர வேண்டும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67 அடியாக உள்ளதால், தண்ணீர் திறக்க முடியாது என்பது அறிந்த விஷயம் என்றாலும், பருவமழையை கணக்கிட்டு மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் வயல்களில் உள்ள கருவேலம் உள்ளிட்ட மரங்களை அகற்ற ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் செலவு ஆகும். மத்திய, மாநில வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.  உரம்,  பூச்சிக்கொல்லி மருந்துகள் குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் முத்தரசன்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT