திருவாரூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரசாரப் பயணம்

விவசாய விளை பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,

DIN

விவசாய விளை பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மக்கள் சந்திப்பு நடைபயண பிரசாரம் புதன்கிழமை மன்னார்குடியில் தொடங்கியது.
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட இலவச குடிநீர், நியாயவிலைக் கடைகளில் தட்டுப்பாடின்றி அத்தியவாசியப் பொருள்கள் விநியோகம், 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரித்து ஊதியத்தை ரூ.400-ஆக உயர்த்துவது, விவசாயப் பொருள்ளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார்குடி ஒன்றியம், வாஞ்சூர் கிராமத்தில் தொடங்கிய இப்பிரசார பயணத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ் தொடங்கிவைத்தார். ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி தலைமை வகித்தார்.
 இக்குழுவினர் வாஞ்சூர், சவளக்காரன், ராமபுரம், மூன்றாம்சேத்தி, சேரன்குளம், பாமணி, தென்கோவனூர், வடகோவனூர் ஆகிய பகுதிகளுக்கு நடை பயணமாக சென்று, கோரிக்கைகளை விலக்கி தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
இதில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். மாரியப்பன், மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.டி. செல்வம், ஊராட்சி முன்னாள் தலைவர் வி.பழனிமலை ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ. ராஜேந்திரன், கட்சி கிளைச் செயலர்கள் கே.பி. சரவணன், எஸ். லோகநாதன், எஸ். ரத்தினவேலு, என்.டி. ரமேஷ், என். ஜெயராமன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அலையாடும் பொழுதிலே... ஐஸ்வர்யா தத்தா!

SCROLL FOR NEXT