திருவாரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் படிப்பவராக இருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் கல்லூரிகளிலிருந்து ஒரு மாணவர் வீதம் அனுப்ப வேண்டும். போட்டிகளுக்கான தலைப்புகள் பங்கேற்கும் மாண வர்களுக்கு போட்டி நடைபெறும் நேரத்தில் தெரிவிக்கப்படும். தலைப்புகள் பெரும்பாலும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் குறித்த வகையில் அமையும்.
முடிவுகள் போட்டி நடைபெறும் நாளன்றே தெரிவிக்கப்படும். போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முறையே முதல் பரிசு ரூ.10,000, 2-ஆம் பரிசு ரூ. 7,000, 3-ஆம் பரிசு ரூ. 5,000 வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில போட்டிக்கு பங்கேற்க அனுமதிக்கப்படுவர். பங்கேற்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதத்துடன் பங்கேற்க வேண்டும். போட்டி குறித்து மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் 3-ஆம் தளத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்துக்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.