திருவாரூர் திருமெய்ஞானேஸ்வரர் கோயிலில் இருந்த சுவாமி கற்சிலைகளை மர்ம நபர்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
திருவாரூர் நகராட்சி பகுதிக்குள்பட்ட ஐநூற்றிபிள்ளையார் கோயில் தெற்குத் தெருவில் உள்ளது பிரசித்தி பெற்ற திருமெய்ஞானேஸ்வரர் கோயில். இக்கோயிலில் பழைமையான தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், சனீஸ்வரன், நாகம்மாள் ஆகிய கற்சிலைகள் உள்ளன.
இந்நிலையில், பூட்டியிருந்த கோயிலுக்குள் புதன்கிழமை மாலை புகுந்த மர்ம நபர்கள் சுவாமி கற்சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் குருக்கள் மோகன், மாலை நேர பூஜைக்காக கோயிலை திறந்தபோது, சுவாமி கற்சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளார். தகவலின்பேரில், திருவாரூர் நகர காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கோயிலில் சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.