திருவாரூர்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

டெங்கு, சிக்குன் குன்யா காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், மன்னார்குடி நகராட்சி அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

டெங்கு, சிக்குன் குன்யா காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், மன்னார்குடி நகராட்சி அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெங்கு உள்ளிட்ட மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும். துப்புரவுப் பணியை  தனியார் மயமாக்கக் கூடாது. நகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். நிரந்தரம் செய்யப்பட்ட தொகுப்பு ஊதிய ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு சிறப்புத் தலைவர் ஜி. ரெகுபதி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநிலத் தலைவர் நா. பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலர் கே. முனியாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் ஏ.டி.பி. லோகநாயகி, சிஐடியு தையல் சங்கத் தலைவர் டி. ஜெகதீசன் ஆகியோர் பேசினர். இதில் ஊழியர் சங்க நகராட்சி துணைச் செயலர் கண்ணாடிவீரன், நிர்வாகிகள் தனுஷ்கோடி, பழனி, பொன்னுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT