மருத்து வப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, மன்னார்குடியில் வியாழக்கிழமை இணைய தள நண்பர்கள் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலராஜவீதி, தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மன்னை ராம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் இலரா.பாரதிசெல்வன் கலந்துகொண்டார்.
இதில் நிர்வாகிகள் செந்தில் பக்கிரிசாமி, செந்தில்குமார், அருண்ரவி, மன்னை ஜீவா, ராசசேகர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.