திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது, சாலை விபத்தில் உயிரிழந்த தம்பதியின் குழந்தைகளுக்கு மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலர் அப்துல்சமது செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினார்.
உப்பூர் கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 3-ஆம்தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் கோட்டூர் தமுமுக கிளைச் செயலாளர் சிராஜ் மற்றும் அவரது மனைவி அனிப்பேகம், கார் ஓட்டுநர் சீனிவாசன் ஆகியோர் இறந்தனர்.
விபத்தில் உயிரிழந்த சிராஜ் - அனிப்பேகம் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்தநிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது, சிராஜ் வீட்டுக்குச் சென்று, அவரது குழந்தைகளுக்கு ஆறுதல்
கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.