அட்சய திருதியை வெள்ளி கருட வாகனத்தில் சந்தானராமர்
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் அட்சய திருதியை விழா புதன்கிழமையன்று நடைபெற்றது.
நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் அட்சய திருதியை விழா புதன்கிழமையன்று நடைபெற்றது.
இக்கோயிலில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான கோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் அப்பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் அட்சய திருதியை விழா நடைபெற்றது. விழாவையொட்டி, சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சந்தானராமர் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி நகரில் முக்கிய வீதிகள் வலம் வந்தார்.