திருவாரூர்

தமிழாசிரியர் இல்லாத பள்ளி: கோட்டாட்சியர் ஆய்வு

DIN

கூத்தாநல்லூரில் தமிழாசிரியர் இல்லாமல் இயங்கும் அரசுப் பள்ளியை, மன்னார்குடி கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
கூத்தாநல்லூர், மரக்கடையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி தமிழாசிரியர் இல்லாமல் இயங்கி வருகிறது. இதுகுறித்து, ஜூலை 22- ஆம் தேதி தினமணி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. 
இதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் உத்தரவின்படி, மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் புண்ணியக்கோட்டி, வட்டாட்சியர் மலர்கொடி , மண்டல துணை வட்டாட்சியர் டி. கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் மரக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இதையறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம். சுதர்ஸன் உள்ளிட்டோர் பள்ளிக்குச் சென்று, வருவாய் கோட்டாட்சியரிடம் அரசுப் பள்ளியில் தமிழாசிரியர் இல்லாதது மிகுந்த வேதனையளிக்கிறது என்றும், உடனடியாக தமிழாசிரியரை நியமிப்பதுடன், காலியாக உள்ள மற்ற பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 
இதற்கிடையில், தமிழாசிரியரை நியமிக்கக் கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இவர்களிடம் கோட்டாட்சியர் செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, 15 நாள்களுக்குள் தமிழாசிரியரை நியமிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்டு ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பியது சென்னை! ஆந்திரம் நோக்கிச் செல்லும் தாழ்வு மண்டலம்

தினம் தினம் திருநாளே!

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

SCROLL FOR NEXT