திருவாரூர்

போதைப் பொருள் ஒழிப்பு தினக் கருத்தரங்கம்

DIN

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 பள்ளி தலைமையாசிரியர் எம்.எஸ். பாலு தலைமை வகித்தார்.  சிறப்பு அழைப்பாளராக ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்பிரபு பங்கேற்று பேசும்போது, "உலகம் முழுவதும் வயது வித்தியாசமின்றி சுமார் 20 கோடி பேர் போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளனர். இளைஞர்களை சீரழிக்கும் சக்தியாக கஞ்சா, அபின், பிரவுன் சுகர் போன்ற போதைப் பொருள்கள் உள்ளன. இவை, மனிதனின் உடல் மற்றும் மனம் இரண்டையும் சிதைத்து, சமூகத்துக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
 இதனால், மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். சமுதாயத்தில் சிறந்த தலைமுறையினரை உருவாக்குவதில் பெரும் பங்காற்ற வேண்டும்' என்றார்.
தொடர்ந்து, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சந்திரசேகரன் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் முகுந்தன்  வரவேற்றார். இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜா நன்றி கூறினார்.

மன்னார்குடியில்...
மன்னார்குடி பவர் ஜேசீஸ் சங்கம் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில்  நடைபெற்றது.
மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி அமலதாசன் விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பவர் ஜேசீஸ் சங்கத் தலைவர் பி. சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேசிய பயிற்சியாளர் சா. சம்பத் பங்கேற்று, போதையின் தீமைகள் குறித்தும், போதையில்  சிக்கிய மாணவர்களின் வாழ்க்கை எப்படி வீணாகிறது என்பது குறித்தும் விளக்கிக் கூறினார். பின்னர், மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.காந்தி லெனின், பள்ளி தாளாளர் ம. ஜேம்ஸ் ரெல்டன், விடுதி காப்பாளர்கள் ஜே.தேவராஜ் பிரபு, சா. ஜில்சன் மெத்தானியல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


சிறை கைதிகளுக்கு ஆலோசனை...
இதேபோல், மன்னார்குடி கிளைச்சிறையில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு அண்மையில் ஆலோசனை வழங்கப்பட்டது. 
மன்னார்குடி அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுரையின்படி, மன்னார்குடி கிளைச்சிறையில் உள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் காசநோய், எய்ட்ஸ்  நோய் பரவும் விதம், நோய்களுக்கான சிகிச்சை முறைகள் பற்றி ஆலோசகர் சுரேந்திரன் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து, அனைவருக்கும் எச்ஐவி பரிசோதனை, காசநோய்க்கான சளிப் பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறைக் கண்காணிப்பாளர் குணசேகரன், ஐசிடிசி பரிசோதனை ஆய்வக நுட்புநர் லேகா, முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் பாலமுகுந்தன், காசநோய் சுகாதார பார்வையாளர் எஸ். மங்களகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT