திருவாரூர்

கும்பாபிஷேகம்

DIN

கமலாதேவி காளியம்மன் கோயிலில்...
மன்னார்குடி கீழராஜவீதியில் உள்ள கமலாதேவி காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.
மக்களவை முன்னாள் உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த எம். கோபாலசாமி தென்கொண்டாரின் முயற்சியில் உருவக்கப்பட்ட கீழராஜவீதி கமலாதேவி கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய, அப்பகுதி ஆன்மிக ஆர்வலர்களால் முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றது. அண்மையில் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 13-ஆம் தேதி கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு அனுக்ஞை, கணபதி, லெட்சுமி, நவகிரக ஹோமங்கள் வளர்க்கப்பட்டது. கோ பூஜையும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, பூர்ணாஹுதி, கும்பஅலங்காரம், யாகசாலை பிரவேசம், நூதன விக்ரம், அஷ்மாதச கிரியை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், விஷேச சாந்தி, லெட்சுமி பூஜை என தொடர்ந்து மூன்று நாள்கள் மூன்று கால பூஜைகள் நடைபெற்றன.
குடமுழுக்கையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆம் கால பூஜையில் சுவாமிகளுக்கு ரக்ஷா பந்தானம், நாடி சந்தானம் நடைபெற்றதையடுத்து புனித நீர் அடங்கிய கடங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன. பின்னர், கடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து,கோயிலின் விமானத்தின் கலசத்தில் வேத மந்திரங்கள் முழங்க சிவாசாரியார்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்யது வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு, சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

திரெளபதை அம்மன் கோயிலில்...
திருவாரூர், செப். 16: திருவாரூர் அருகே சிட்டிலிங்கம் பகுதியில் உள்ள திரெளபதை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிட்டிலிங்கம் பகுதியில் உள்ள திரெளபதை அம்மன் கோயில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கின. இதையடுத்து, திங்கள்கிழமை 2-ஆம் கால பூஜைகள், பூர்ணாஹுதி ஆகியவை நிறைவு பெற்று, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோயில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


வல்லப கணபதி கோயிலில்...
வலங்கைமான் வல்லப கணபதி கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து, திங்கள்கிழமை (செப்டம்பர் 16) காலை 9.45 மணிக்கு கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை, திருப்பணிக் குழுவினர் ஸ்ரீவல்லபகணபதி இளைஞர் நற்பணி மன்றத்தினர், வளையல்காரத் தெருமக்கள் செய்திருந்தனர்.

150 ஆண்டுகள் பழைமையான வெள்ளை விநாயகர் கோயிலில்...
கூத்தாநல்லூர் அருகேயுள்ள பாலாக்குடியில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழைமையான வெள்ளை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
பாலாக்குடியில் வெண்ணாற்றுக்கும், பாண்டவையாற்றுக்கும் நடுவில் எழுந்தருளியுள்ள 150 ஆண்டுகள் பழைமையான  வெள்ளை விநாயகர் கோயில் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யாமல் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, வெள்ளை விநாயகர் கோயிலை, கிராமமக்கள் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, திருச்சியைச் சேர்ந்த பக்தர் எஸ். வரதராஜன் ரூ. 1 லட்சம் வழங்கியதன் பேரில், பக்தர்களின் ஏற்பாட்டில் ரூ. 5 லட்சம் செலவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. 
விழாவையொட்டி, கோயில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் முதற்கால பூஜை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கோ பூஜை, 9 மணிக்கு 2-ஆம் காலை பூஜையுடன் மஹா பூர்ணாஹுதி செய்யப்பட்டு, காலை 9.55 மணிக்கு கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
அப்போது, ஓய்வு பெற்ற ஆசிரியர் சண்முகம் மற்றும் பக்தர்களால் ஐம்பொன்னால் 16 கிலோ எடையில் செய்யப்பட்ட உத்ஸவ விநாயகர் சிலையை கோயிலில் ஒப்படைத்தார். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கூத்தாநல்லூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றச் செயலாளர் என். செல்வராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT