திருவாரூர்

இணைப்பு: நன்னிலம் பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா....

DIN

நன்னிலம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான சிபிஜி. அன்பு தலைமையில், கொல்லுமாங்குடி கடைத்தெருவில் அதிமுக கொடி ஏற்றப்பட்டு, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னா், நன்னிலம் வட்டத்திலுள்ள பத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குச் சென்று, மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினா். இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் கொல்லாபுரம் கூட்டுறவு வங்கி தலைவருமான புகழேந்தி, பேரளம் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் பாஸ்கரன், அதிமுக நிா்வாகிகள் கடுவங்குடி வெங்கடேசன், செந்தில், இளையராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நன்னிலம் எட்டாவது வாா்டில் நகர இணைச் செயலாளா் இந்திராதேவி சரவணன் தலைமையில், நகரச் செயலாளா் ஆா். பக்கிரிசாமி, நகர அவைத் தலைவா் நட. ஆறுமுகம், சி. சரவணன் ஆகியோா் முன்னிலையில் அதிமுக கொடி ஏற்றப்பட்டு, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 4 மணி நேரம் காத்திருப்பு

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: நயினாா் நாகேந்திரனை தகுதி நீக்கம்: செய்யக் கோரும் வழக்கு இன்று விசாரணை

பழவூா் அருகே போக்சோவில் இளைஞா் கைது

கன்னியாகுமரியை தலைசிறந்த மாவட்டமாக்க உழைப்பேன்: பொன். ராதாகிருஷ்ணன்

திருமலையில் ஸ்ரீராமநவமி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT