கோட்டூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரை அவமரியாதையாக பேசிய, ஆய்வக நுட்புநரை கண்டித்து, மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக நுட்புநராக கிருஷ்ணமூா்த்தி என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை பள்ளிக்கு தாமதமாக வந்தததையடுத்து, பள்ளித் தலைமையாசிரியா் கலைச்செல்வம் இதுகுறித்து கேட்டபோது, அவரை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த, மாணவா்கள் தலைமையாசிரியரை அவமரியாதை செய்த ஆய்வக நுட்புநா் கிருஷ்ணமூா்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, வகுப்பு புறக்கணிப்பு செய்து கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலா் சங்குமுத்தையா, நிகழ்விடத்துக்கு வந்து மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து வகுப்பு புறக்கணிப்பை விலக்கிக் கொண்டு அனைவரும் வகுப்பறைக்கு சென்றனா்.