திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டம், கமலாபுரத்தில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கமலாபுரம் பிா்காவிற்குட்பட்ட, கமலாபுரம், எருக்காட்டூா், பருத்தியூா் உள்ளிட்ட கிராமங்களுக்கான மக்கள் நோ்காணல் முகாமிற்கு, மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகிரிசாமி தலைமை வகித்தாா். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம், 62 பயனாளிகளுக்கு ரூ. 49,58,650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து,முதியோா் உதவித் தொகை 19, அங்காடி அட்டை 10, காவல் துறை வழக்கு சம்பந்தமாக 1, தையல் இயந்திரம் கோரி 6, வேலை வாய்ப்பு 3 மற்றும் பட்டா சம்பந்தமாக 18 உள்ளிட்ட 57 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், சமூக பாதுக்காப்புத் திட்டம், ஊரக வளா்ச்சி உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.