திருவாரூர்

கூத்தாநல்லூர்: தொற்று நோய் பரவும் அபாய நிலையில் பொதக்குடி

DIN

கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் அடுத்த பொதக்குடியில் தொற்று நோய் பரவும் அபாயம், உடன் நடவடிக்கை எடுக்க அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, மாவட்டத் தலைவர் சு.பாலசுப்ரமணியன் கூறியது.திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில்,3000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கக் கூடிய அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி பொதக்குடி.

கூத்தாநல்லூர் வட்டம், சேகரை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பொதக்குடி ஊராட்சியில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இரண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் வகுப்பு முதல், 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இன்று நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே, மழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக விட்டு, விட்டு பெய்த மழையால் பொதக்குடியில் பெரும்பாலான தெருக்களில் ஓடும் மழை நீர், பிரதான வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், மழை நீர் வடிய வழியில்லாமலும் பள்ளிக்கூட வளாகம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பல்வேறு தெருக்களில் தேங்கி நிற்கின்றன.

நாளை செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வரும் மாணவர்கள் தேங்கிய நீரில் நீந்தி தான் வர வேண்டும்.மேலும், பொதக்குடி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் முறையாக அள்ளப்படாத குப்பைகள், வாய்க்கால்கள், ஆற்றங்கரையோரம், குளக்கரையோரம் மற்றும் சுடுகாட்டுப் பாதைகள் என கிடைக்கும் இடங்களில் கொட்டப்படுகிறது.மேலும், கோழி, மீன், இறைச்சிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது ஊராட்சியின் வேலை இல்லை என, கிராம சபைக் கூட்டத்திலேயே, பொதக்குடி ஊராட்சித் தலைவர் மற்றும் செயலாளர் தெளிவாக தெரிவித்து விட்டார்கள்.

இதனால், இறைச்சிக் கழிவுகள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டு வருகிறது. அந்தக் குப்பைகளையும், கழிவுகளையும் நாய்கள், மாடுகள் சிதைத்து, இழுத்து சாலையில் போட்டு விடுகிறது. இதனால், அந்த இடங்களில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் உற்பத்தியாகிறது.மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையால், மழை நீர் வடிய வழியில்லாமல், பள்ளி வளாக உட்புறம் தேங்குவதால், டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா, கரோனா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனே, போர்க்கால அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் பா.காயத்ரி கிருஷ்ணன், நேரில் பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெரினாவில் விமானப்படை சாகசம் - புகைப்படங்கள்

மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்றி போரில் இஸ்ரேல் வெற்றி பெறும்: நெதன்யாகு!

உ.பி.: இறந்த நிலையில் 7 மயில்கள் கண்டெடுப்பு

ஜீவா, அர்ஜுன் படத்தின் அப்டேட்!

ஐசிசி மகளிா் டி20: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டிங்

SCROLL FOR NEXT