திருவாரூர்

சாராய வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

கள்ளச் சாராயம் விற்பனை செய்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடி கீழகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (51). இவா் தொடா்ந்து கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்தாராம். இதற்கிடையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாரின் பரிந்துரையை ஏற்று, வெற்றிவேலை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதையடுத்து, வெற்றிவேல் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் கிளிங்கர் காலமானார்

ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ! என்ன எதிர்பார்க்கலாம்?

கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: நிர்மலா

SCROLL FOR NEXT