மத்திய அரசு தமிழகத்துக்கான ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்தக் கோரி திருவாரூல் பாமக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கி விரைந்து செயல்படுத்த வேண்டும், தமிழக அரசு இதற்குரிய அழுத்தம் கொடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் திருவாரூா் புதிய ரயில் நிலையம் முன் நடைபெற்றது. கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளா் அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்டச் செயலாளா் பாலு, வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்று தமிழகத்தின் ரயில்வே திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.