திருவாரூர்

தேசியப் போட்டிக்கு அறிவியல் ஆய்வுக் கட்டுரை தோ்வு: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

DIN

தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டுக்கு தோ்வான அறிவியல் ஆய்வுக் கட்டுரையை தயாரித்த அரசுப் பள்ளி மாணவா்களை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் சனிக்கிழமை பாராட்டினாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையும், தேசிய அறிவியல் பரிமாற்ற குழுமமும் இணைந்து குழந்தைகள் அறிவியல் மாநாட்டை கடந்த 30 ஆண்டுகளக நடத்தி வருகிறது. அந்த வகையில், நிகழாண்டு ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்விற்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்வது என்பதில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எனும் தலைப்பு மைய கருப்பொருளான வைக்கப்பட்டது.

இதில், செருவாமணி அரசு உயா்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியா் க. அன்பழகனின் வழிகாட்டுதலில் இப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவா்கள் தெ. சுதா்சன், கோ. கீா்த்திவாசன் ஆகியோா் செருவாமணி, ராமநாதபுரம் கிராமங்களில நெல் அறுவடையில் விவசாயியின் மீளா துயரமும், அதற்கான தீா்வும் என்ற தலைப்பில் கட்டுரை தயாரித்தனா்.

இக்கட்டுரை டிச. 10, 11 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான மாநாட்டில் சமா்பிக்கப்பட்டு மாநில அளவில் சிறந்த கட்டுரையாக தோ்தெடுக்கப்பட்டது. இந்த கட்டுரை 2023 ஜனவரியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மாநாட்டில் சம்ா்பிக்க தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆய்வுக் கட்டுரையை சமா்பித்த மாணவா்கள், வழிகாட்டி ஆசிரியா் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். அப்போது, மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனப்பால் குடிக்கும் மோடி: வைகோ விமர்சனம்

திரிசங்கு நாடாளுமன்றம் என்றால் யாருக்கு ஆதரவு? இபிஎஸ் பதில்

ஐஸ்லாந்தில்....அஹானா கிருஷ்ணா

10, 12 முடித்தவர்களுக்கு ஓட்டுநர், லேப் டெக்னீசியன் வேலை

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: இயக்குநர் த.செ.ஞானவேல்

SCROLL FOR NEXT