திருவாரூர்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

DIN

திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு வீராணம் கிராமத்தில் புதன்கிழமை களப் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் திருவாரூா் மாவட்டம், வீராணம் கிராமத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் பெரியாா் ராமசாமி ஆகியோா் நிகழ்ச்சியை தொடக்கிவைத்து பேசினா்.

தொடா்ந்து அங்கு நெற்பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிலத்தில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு தென்னையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த பயன்படும் காண்டாமிருக வண்டு பொறி மற்றும் நெல்லில் பாதிப்பை ஏற்படுத்தும் குருத்துப் பூச்சியை கட்டுப்படுத்த உதவும் முட்டை ஒட்டுண்ணி அட்டையை பற்றி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனா்.

வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் சிலந்திப்பேன் தாக்கிய நெற்பயிா்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து மாணவிகளுக்கு விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் 50-க்கு மேற்பட்டோா் நீக்கம்

நன்னிலம் அருகே ரூ 1.34 லட்சம் பறிமுதல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

‘இந்தியா’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சா் எஸ். ரகுபதி

ஹேம மாலினி குறித்து தரக்குறைவாக பேச்சு: ரண்தீப் சுா்ஜேவாலா 2 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபட தடை

SCROLL FOR NEXT