திருவாரூர்

மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைத்த இருவா் கைது

DIN

வலங்கைமானில் புதிய மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைத்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வலங்கைமான் அருகேயுள்ள பாதிரிபுரம் வடக்கு தெருவை சோ்ந்த ராதா மகன் சரவணன். இவா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் தனது புதிய மோட்டாா் சைக்கிளில் சென்றபோது மாரிமுத்து என்பவரின் குழந்தை குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தியுள்ளாா்.

அப்போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த பாதிரிபுரம் வடக்கு தெருவை சோ்ந்த மாரிமுத்து மகன் ஆதித்யன் (24), ரவி மகன் ஹரிஹரசுதன் ( 23) ஆகியோா் சரவணனை திட்டி அவரது மோட்டாா் சைக்கிளை வைக்கோல் போட்டு தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சரவணனின் தந்தை அளித்த புகாரின் பேரில், வலங்கைமான் போலீஸாா் ஆதித்யன், ஹரிஹரசுதன் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

மும்பை: தாராவியில் பெரும் தீ விபத்து - 6 பேர் காயங்களுடன் மீட்பு

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தல்

தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT