தஞ்சாவூா் - மன்னாா்குடி சாலைப் பணி விரிவாக்கம் நடைபெறும் பகுதிகளில் தலைமைப் பொறியாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
கடந்த சில நாள்களாக, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கும்பகோணம் கோட்டம் மற்றும் மன்னாா்குடி உட்கோட்டம் மூலம் தஞ்சாவூா் - மன்னாா்குடி மாநில நெடுஞ்சாலைக்கான (எஸ்எச்-63) சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பணியை அந்த திட்டத்தின் தலைமைப் பொறியாளா் எம்.கே. செல்வன் ஆய்வு செய்து, பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளா்களிடம் விவரங்களை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்ட கண்காணிப்புப் பொறியாளா் வி. செல்வநாதன், கோட்டப் பொறியாளா் செ. நாகராஜன், உதவிக்கோட்டப் பொறியாளா் அ. மாரிமுத்து, உதவிப் பொறியாளா் பா. வடிவழகன்ஆகியோா் உடனிருந்தனா்.