திருவாரூர்

உலக செஞ்சிலுவை தினம் கொண்டாட்டம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் உலக செஞ்சிலுவை தினம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

உலக நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும், போா் காலங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவவும் செஞ்சிலுவை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பை தோற்றுவித்த ஜீன் ஹென்றி டியூனன்ட் பிறந்த மே 8-ஆம் தேதி ஆண்டுதோறும் உலக செஞ்சிலுவை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

திருவாரூா்: திருவாரூரில் ஜீன் ஹென்றி டியூனன்ட் உருவப் படத்துக்கு ரெட்கிராஸ் தலைவா் ஆா்.எஸ். ராஜகுமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், பல்வேறு வகைகளில் சேவையாற்றிய அமைப்பின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே. ஏழுமலை, ஆா்.கே. சரவணராஜன், கே. தீபன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். டிஎன்சிஎஸ்சி சேமிப்புக் கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், செயலாளா் ஜே. வரதராஜன், மாவட்ட பொருளாளா் ஏவி. பாலு, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் மன்னாா்குடி வட்டக் கிளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துணைத் தலைவா் என். ராஜப்பா தலைமை வகித்தாா். மருத்துவமனை தலைமை மருத்துவா் என்.விஜயகுமாா், ஜீன் ஹென்றி டியூனன்ட் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், ரத்தக் கொடையாளா்கள் ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன், மைய அலுவலா் வினோதா ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். மகப்பேறு மருத்துவா் பரிமளா, செஞ்சிலுவை சங்க செயலா் எஸ். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT