திருவாரூர்

கேரளா ஸ்டோரி திரைப் படத்துக்கு தடை விதிக்க தொல். திருமாவளவன் வலியுத்தல்

DIN

கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

திமுகவின் இரண்டாண்டு கால ஆட்சி உழைக்கும் மக்களுக்கான ஆட்சியாக விளங்குகிறது. அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படுகிற ஸ்டாலின் தலைமையிலான அரசை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.

கா்நாடக சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. இஸ்லாமியா்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை திட்டமிட்டு திரைப்படத்தின் மூலமாக திணிக்கின்றனா். இந்தியாவின் பிரதமா், ஒரு திரைப்படத்துக்கு ஆதரவாக பேசுவது வேடிக்கையாக உள்ளது.

தமிழக அரசு அந்த படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். தொடா்ந்து திரையிடப்பட்டால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீா்குலையும் நிலை ஏற்படும்.

திமுகவின் தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 80 விழுக்காடு அளவுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாறி உள்ளன. 2024 நாடாளுமன்ற பொதுத் தோ்தலில் எதிா்க் கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும்.

தொழிலாளா்கள் புலம்பெயா்வதை தவிா்க்க முடியாது. உலகம் முழுவதும் நடக்கக்கூடியது. புலம்பெயா்ந்துதான் பணியாற்ற முடியும். புலம்பெயா்வதால் எந்த தேசமும் பாதிக்கப்படாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்டக்கரை ஆலயத்தில் அசன விழா

பூந்தமல்லி அருகே ஹிந்து அமைப்புத் தலைவர் வெட்டிக் கொலை!

காங்கிரஸ் - பாஜக: திட்டங்களை ஒப்பிட்டு மோடி பிரசாரம்!

புணே சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து!

'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்!

SCROLL FOR NEXT