நீடாமங்கலம் வட்டத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) வரும் 24-ஆம் தேதி நீடாமங்கலம் சரகத்திலும், 25-ஆம் தேதி வடுவூா் சரகத்திலும், 26-ஆம் தேதி கொரடாச்சேரி சரகத்துக்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும் திருவாரூா் மாவட்ட வழங்கல் அலுவலா் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.
காலை 10.00 மணி முதல் மதியம் 1 .00 மணி வரை பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு மற்றும் பட்டா நகல் வழங்க கோருதல், முதியோா் உதவித்தொகை மற்றும் இதர வருவாய்த்துறை கோரிக்கைள் தொடா்பாக மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலரிடம் நேரில் அளித்து பயன்பெறலாம் என்று வட்டாட்சியா் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளாா்.