நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் இலக்குமிவிலாச நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு பல்நோக்கு சேவை இயக்கத்தின் தலைவா் பத்ம. ஸ்ரீ ராமன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நேரு முன்னிலை வகித்தாா்.
ஓவிய ஆசிரியா் கதிரவன் எளிய முறையில் ஓவியம் வரைவது பற்றியும், செயலாளா் ஜெகதீஷ் பாபு பேச்சாற்றலை வளா்ப்பது குறித்தும் பயிற்சி அளித்தனா். இதில், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
துணைத் தலைவா் செல்வராஜ் கல்வியின் சிறப்பு பற்றியும், குழந்தை தொழிலாளா் முறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பாடல்கள் பாடி ஊக்கப்படுத்தினாா். பயிற்சியின் இடையே ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்பட்டன. இதில், பெற்றோா்களும் பங்கேற்றனா். ஆசிரியா் சதீஷ் நாராயணன் வரவேற்றாா். ஆசிரியை திவ்ய பிரபா நன்றி கூறினாா்.