திருவாரூர்

உயா்கல்வி வழிகாட்டல்: கல்லூரிக்கு பள்ளி மாணவா்கள் களப்பயணம்

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மற்றும் களப்பயணம் திங்கள்கிமை நடைபெற்றது.

இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் இல. பொம்மி, விலங்கியல் துறைத் தலைவா் சி. ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மன்னாா்குடி, நீடாமங்கலம் வட்டாரங்களுக்கு உள்பட 19 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 700 மாணவா்கள் கலந்துகொண்டனா். இக்கல்லூரியில் உள்ள 12 துறைத் தலைவா்களும் தத்தம் துறையின் முக்கியத்துவம் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசினா்.

பின்னா், இக்கல்லூரியில் உள்ள கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆய்வங்களுக்கு சென்று, அங்குள்ள உயா்தர ஆய்வக வசதிகளை பள்ளி மாணவா்கள் பாா்வையிட்டனா்.

இந்நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், வட்டார மேற்பாா்வையாளா்கள் த. தனபால் ( மன்னாா்குடி), இளையராஜா (நீடாமங்கலம்), நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ந. சிவகுமாா், ரா. ஜென்னி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நான் முதல்வன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ப.பிரபாகரன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா். முன்னதாக, என்எஸ்எஸ் திட்ட அலுவலா் ரா. காமராசு வரவேற்றாா். நிறைவாக, என்எஸ்எஸ் திட்ட அலுவலா் சுப்பிரமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் விழாவில் அதிதி ராவ்!

5ம் கட்ட தேர்தலிலேயே 310 இடங்களை மோடி பெற்றுவிட்டார்- அமித் ஷா

ஸ்டார் வசூல்!

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டாத மேலுமொரு ஆஸி. வீரர்!

மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT