திருவாரூர்

பணிநிரந்தரம் கோரி துப்புரவுப் பணியாளா்கள் போராட்டம்

நகராட்சி, பேரூராட்களில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவாரூரில்

Syndication

திருவாரூா்: நகராட்சி, பேரூராட்களில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவாரூரில் சிஐடியு மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சி ஊழியா் சங்கம் சாா்பில் வேலைநிறுத்த போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாா்களை தோ்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா், கணினி இயக்குநா் ஆகியோரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், மேல்நிலைத்தொட்டி இயக்குவோா், தூய்மைப் பணியாளா்கள், வேலை நிறுத்தம் செய்து பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா். மாவட்டத்தலைவா் எஸ். காமராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் எம். முரளி, சிஐடியு மாவட்டத் தலைவா் கே.பி. ஜோதிபாசு, மாவட்ட பொருளாளா் கே. கஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் ரா.மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னை: 41 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து! பயணிகள் அவதி!

இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்

விருப்பங்கள் கைகூடும் மீன ராசிக்கு: தினப்பலன்கள்!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இண்டி கூட்டணி தீவிரம்!

ரயில்வே அலுவலா் வீட்டில் ரூ. 3.50 லட்சம், வெள்ளி திருட்டு

SCROLL FOR NEXT